தந்தை கனவை நனவாக்கிய விவேக்மகள் தேஜஸ்வினி..!

28 பங்குனி 2024 வியாழன் 09:25 | பார்வைகள் : 8523
நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினி திருமணம் இன்று நடந்த நிலையில் இந்த திருமணத்தில் விவேக் கனவை அவரது மகள் நனவாக்கி உள்ளார்.
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென காலமான நிலையில் அவருக்கு தேஜஸ்வினி, அமிர்தா என்ற ஆகிய மகள்களும் பிரசன்னா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் தேஜஸ்வினி திருமணம் இன்று மிகவும் எளிமையாக நடந்தது.
விவேக்கின் மகள் தேஜஸ்வினி, பரத் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமணம் சென்னை விருகம்பாக்கம் சின்ன கலைவாணர் சாலையில் இருக்கும் வீட்டில் நடைபெற்றது.
தனது மகள் திருமணத்திற்கு வருபவர்களுக்கு மரக்கன்று, மூலிகை பூச்செடிகள் பரிசாக வழங்க வேண்டும் என்று விவேக்கின் கனவாக இருந்த நிலையில் அந்த கனவை இன்று அவரது மகள் நிறைவேற்றினார். இன்று திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் பரிசாக வழங்கப்பட்டது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025