அமெரிக்காவில் கொடூரச் சம்பவம் - 4 பேர் படுகொலை

28 பங்குனி 2024 வியாழன் 05:41 | பார்வைகள் : 7885
அமெரிக்காவில் ராக்போர்ட், இல்லினாய்ஸ் பகுதியில் கத்தி குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கத்தி குத்து சம்பவத்தில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையிலும் ஏனைய நான்குபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு நேரத்தின்படி பகல் 1:15 மணிக்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்ததாக ராக்போர்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025