இலங்கையில் 04 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - ஒருவர் மாயம்

27 பங்குனி 2024 புதன் 13:02 | பார்வைகள் : 6032
அலவ்வ பிரதேசத்தில் உள்ள மா ஓயா ஆற்றில் நீராட சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஐந்து பேர் அடங்கிய மாணவர் குழுவொன்று நீராட சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நீரில் மூழ்கிய மற்றுமொரு மாணவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.