Paristamil Navigation Paristamil advert login

கடந்த ஆண்டில் 57 புதிய தொழிற்சாலைகள் திறப்பு!!

கடந்த ஆண்டில் 57 புதிய தொழிற்சாலைகள் திறப்பு!!

27 பங்குனி 2024 புதன் 10:19 | பார்வைகள் : 12513


கடந்த 2023 ஆம் ஆண்டு பிரான்சில் 57 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முந்தைய 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது அதிகமான எண்ணிக்கையாகும். அதேவேளை, 2023 ஆம் ஆண்டில் பல்வேறு தொழிற்சாலைகள் விஸ்தரிப்புக்கும் உள்ளானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த 57 தொழிற்சாலைகளில் 47 உணவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகும்.

தொழில்துறை மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் Roland Lescure இதனை இன்று மார்ச் 27 ஆம் திகதி தெரிவித்தார். இவர் அமைச்சராக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நியமிக்கப்பட்டதை அடுத்து, தொழிற்சாலைகளை உருவாக்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார். 

குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நாட்டினை சீர்படுத்த இதுபோன்ற உற்பத்தி தொழிற்சாலைகள் பெரிதும் உதவுவதாகவும் தெரிவித்தார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்