காசாவில் உதவிப் பொருட்களைப் பெற முயன்ற 12 பேர் கடலில் மூழ்கி பலி...!
27 பங்குனி 2024 புதன் 10:15 | பார்வைகள் : 11628
காசா மீது வான்வெளி ஊடாக வீசப்பட்ட உதவிப்பொருட்கள் கடலில் விழுந்த வேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காசாவில் வாழும் மக்கள் போரினாலும், பட்டினியாலும் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மக்களுக்கு உதவும் விதமாக 18 பொதிகளில் மனிதாபிமான உதவிகளை பரசூட் மூலம் வழங்க பென்டகன் முயற்சித்துள்ளது.
குறித்த பரசூட் இயங்காததால் அவை கடலிற்குள் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan