தமிழில் மீண்டும் களமிறங்கும் சமந்தா..
27 பங்குனி 2024 புதன் 07:39 | பார்வைகள் : 12336
நடிகை சமந்தா மயோசிட்டி என்ற நோயில் இருந்து குணமாகி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில் தற்போது அவர் ’சிட்டாடல்’ என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்க இருக்கும் சமந்தா, தமிழிலும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது,
என்னதான் தெலுங்கு ஹிந்தி என கொடிகட்டி பறந்தாலும் சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா, தமிழில் ஒரு அட்டகாசமான படத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களிடம் ஒரே ஒரு சின்ன நிபந்தனை மட்டும் விதிப்பதாகவும், அது ஹீரோயின் சப்ஜெக்ட் வேண்டாம் என்றும் பக்கா மாஸ் கமர்ஷியல் படமாக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகிறாராம்.
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்கள் சமந்தாவுடன் இணைந்து நடிக்க காத்திருக்கும் நிலையில் அவர் எந்த ஹீரோ உடன் ரீ என்ட்ரி ஆக போகிறார் என்பதை திரை உலகினர் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதையடுத்து விரைவில் சமந்தா நடிக்க உள்ள தமிழ் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நடிகை சமந்தா கடந்த 2022 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை அடுத்து நேரடி தமிழ் படத்தில் இருந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan