Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் பாரிய தீ விபத்து! 53 பேர் பலி

அமெரிக்காவில் பாரிய தீ விபத்து! 53 பேர் பலி

11 ஆவணி 2023 வெள்ளி 09:56 | பார்வைகள் : 10665


அமெரிக்காவின் ஹவாய் தீவில்  பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

மயுய் என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக ஆயிரத்து 700க்கும் அதிகமான கட்டடங்கள் நெருப்பில் எரிந்த நாசமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று நகரமான லஹைனா 80 விழுக்காடு அழிந்துவிட்டதாக ஹவாய் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி36 ஆக இருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹவாய் காட்டுத் தீ பெரும் இயற்கைப் பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து எரிந்து வரும் நெருப்பு காரணமாக 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அடிக்கடி காட்டுத் தீயால் பாதிக்கப்படும் கலிபோர்னியாவில் இருந்து ஹவாய்க்கு மீட்பு மற்றும தேடுதல் வேட்டைக்கு குழுக்களை அனுப்புவதாக கலிபோர்னிய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்