'இந்தியன் 2' சிங்கிள் பாடல் எப்போது?
25 சித்திரை 2024 வியாழன் 06:29 | பார்வைகள் : 6831
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் படமாக்கப்பட்ட சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் பாடல் தான் முதல் சிங்கிள் பாடலாக வெளியாக இருப்பதாகவும் இந்த பாடலின் டைட்டில் "தாத்தா வராரு தாத்தா வராரு" என்றும் கூறப்படுகிறது. அனேகமாக இந்த படத்தில் இந்த பாடல் தான் முதல் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் ரிலீஸ் ஆகும் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் ’இந்தியன் 2’ கொண்டாட்டம் இதன் மூலம் ஆரம்பமாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

























Bons Plans
Annuaire
Scan