வேல்ஸ் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்! டீன் ஏஜ் பெண் கைது
 
                    25 சித்திரை 2024 வியாழன் 05:02 | பார்வைகள் : 8413
பிரித்தானியாவின் வேல்ஸ் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் டீன் ஏஜ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
மேற்கு வேல்ஸில் உள்ள யுஸ்கோல் டைஃப்ரின் அமான் பள்ளியில்(Ysgol Dyffryn Aman School) புதன்கிழமை நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட இரு ஆசிரியர்களும் ஒரு மாணவரும் கத்திக்குத்து காயங்களுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் சுமார் 11:20 மணியளவில் நடந்ததாக கூறப்படும் நிலையில், கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் டீன் ஏஜ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக பள்ளி உடனடியாக முடக்கப்பட்டது.
11 முதல் 18 வயது வரையிலான 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் யுஸ்கோல் டைஃப்ரின் அமான் பள்ளி இதனால் பல மணி நேரம் முடக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் இறுதியாக மாலை 3:20 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர், அவர்களை அழைத்துச் செல்ல நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் கவலையுடன் காத்திருந்தனர்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan