Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில்  விமானம் நொறுங்கி விழுந்து விபத்து....இருவர் பலி

அமெரிக்காவில்  விமானம் நொறுங்கி விழுந்து விபத்து....இருவர் பலி

25 சித்திரை 2024 வியாழன் 02:56 | பார்வைகள் : 7078


அமெரிக்க நகரமொன்றில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி  இருவர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Fairbanks விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய Douglas C-54 Skymaster எனும் விமானம், அலாஸ்காவில் Tanana நதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. நதியின் கரையில் ஒரு செங்குத்தான மலையில் சரிந்து விமானம் தீப்பிடித்ததாக அலாஸ்கா மாநில துருப்புகள் தெரிவித்தனர். 

மேலும், இதில் உயிர் பிழைத்தவர்கள் யாரும் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் அலாஸ்கா பிராந்திய அலுவலகத்தின் தலைவரான கிளின்ட் ஜான்சன் கூறுகையில்,

''விமானம் புறப்பட்டு விபத்திற்குள்ளான நேரத்தில் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் டவர் operator ஒரு பாரிய புகை மண்டலத்தைக் கண்டார்'' என்றார்.   

வர்த்தக‌ விளம்பரங்கள்