இலங்கையில் கோடிக்கணக்கில் விற்பனையான மாணிக்கக்கல்
17 ஆவணி 2023 வியாழன் 03:39 | பார்வைகள் : 8637
இரத்தினபுரியில் நேற்று மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மாணிக்கக்கல் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ப்ளுபேயா ரக மாணிக்கக்கல்லே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
43 கோடி ரூபாவிற்கு இந்த மாணிக்கக்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஹவத்தை - கட்டங்கே பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து இந்த மாணிக்கக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணிக்கக்கல் 99 கரட் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்மடுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இந்த மாணிக்கக்கல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan