Paristamil Navigation Paristamil advert login

ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்

ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்

24 சித்திரை 2024 புதன் 06:19 | பார்வைகள் : 5566


 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பின் பல பகுதிகளில் பாதுகாப்பு மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி வந்த விமானம் மத்தள விமான நிலையத்தில் சற்று முன்னர் தரையிறங்கியுள்ளது.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று (24) ஈரான் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஈரான் ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளும் இன்று பிற்பகல் கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன.

அத்துடன், இரு நாட்டு தலைவர்களும் விசேட கூட்டு உரையாற்றி திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்