நாகைசதன்யாவுடன் சோபிதா காதலா?”
24 சித்திரை 2024 புதன் 06:10 | பார்வைகள் : 6247
நடிகர்கள் நாகசைதன்யா- சமந்தா ஜோடிக்கு கடந்த 2021-ல் விவாகரத்து ஆனது. அதன் பின்னர், இருவரும் தங்கள் சினிமா கரியரில் பிஸியாக நடித்து வருகின்றனர். ஊடாக, சமந்தா மையோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சினிமாவுக்கு பிரேக் கொடுத்துள்ளார்.
ஸ்டைலிஸ்ட்டுடன் காதல் கிசுகிசு, விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் என அவ்வப்போது சமந்தாவை சுற்றி இரண்டாவது திருமணம் பற்றிய பேச்சு வந்தாலும் அதற்கெல்லாம் பதிலளிக்காமல் மெளனம் காத்து வருகிறார் சமந்தா.
இதுபோலவே, நாகசைதன்யாவை சுற்றியும் காதல் கிசுகிசு வலம் வருகிறது. ‘பொன்னியின் செல்வன்’ நடிகை ஷோபிதா துலிபலாவுடன் நாகசைதன்யா அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் கசிவதுண்டு. அப்படித்தான் இப்போதும் இருவரும் அவுட்டிங் சென்றுள்ள புகைப்படங்களைத் தனித்தனியாக இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
நாகசைதன்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் சன் செட் காட்சிகளை அமர்ந்து ரசிக்கும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதுபோலவே, ஷோபிதாவும் ஜீப்பில் இருந்து சன் செட் மற்றும் காட்டுக்குள் பயணிக்கும் காட்சிகளை பகிர்ந்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள், ’இருவரும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு தனித்தனியாக புகைப்படங்களைப் பகிர்கிறார்கள்’ என்றும் நாகசைதன்யாவின் பதிவில் ‘ஷோபிதாவுடன் இருக்கிறீர்களா?’ என்றும் கேட்டு வருகிறார்கள்.
முன்பு ஷோபிதாவிடம், ”நாகைசதன்யாவுடன் காதலா?” என்று கேட்டதற்கு ”அதெல்லாம் இல்லை... இருவரும் நல்ல நண்பர்கள்!” என்று மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan