Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோவில் வீட்டு  வாடகை  தொகையில் தொடர்ச்சியான வீழ்ச்சி

ரொறன்ரோவில் வீட்டு  வாடகை  தொகையில் தொடர்ச்சியான வீழ்ச்சி

24 சித்திரை 2024 புதன் 05:43 | பார்வைகள் : 8501


ரொறன்ரோவில் சராசரி வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக குறைவடைந்துள்ளதாக rentals.ca என்ற இணைய தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் வாடகைத் தொகையானது கடந்த மாதத்தை விடவும் 0.7 வீதமாக குறைவடைந்துள்ளது.

இதன்படி இந்த மாதத்தில் சராசரி வாடகைத் தொகையானது 2782 டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதலே வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கனடாவில் வாடகைத் தொகை மிகவும் அதிகமான நகரங்களில் ஒன்றாக ரொறன்ரோ திகழ்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோவில் ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 2489 டொலர்கள் எனவும் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 3270 டொலர்கள் எனவும் மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 3728 எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்