Paristamil Navigation Paristamil advert login

சென் நதி தூய்மைப்படுத்தப்படும்! - மீண்டும் உறுதியளித்த ஜனாதிபதி!!

சென் நதி தூய்மைப்படுத்தப்படும்! - மீண்டும் உறுதியளித்த ஜனாதிபதி!!

23 சித்திரை 2024 செவ்வாய் 16:04 | பார்வைகள் : 8592


ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான பேச்சுக்கள் எழுந்த காலம் முதல், சென் நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பான சர்ச்சைகளும் தொடர்கின்றது.

'சென் நதியில் நான் நீந்துவேன்!' என சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்திருந்த நிலையில், இன்று மீண்டும் அதனை உறுதிப்படுத்தினார். ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் சென் நதி மற்றும் Marne  நதிகள் தூய்மைப்படுத்தப்படும் எனவும், 'நாங்கள் சரியான நேரத்தில் தயாராக இருப்போம்!' என அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 94 நாட்கள் மட்டுமே இருக்கிறது என்பதை குறிக்கும் விதமாக 'J-94' எனவும் அவர் தெரிவித்தார்.

'நாங்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடுவோம். சென் நதியில் இருந்து வரும் நீர் புதிதாக இருக்கும்.  நான் அதை உறுதிப்படுத்துகிறேன்!' என அவர் மேலும் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்