எரிமலை வாயினருகே நின்று புகைப்படம் எடுக்க முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

23 சித்திரை 2024 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 7451
இந்தோனேசியாவில், எரிமலை ஒன்றின் வாயினருகே நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், தவறி எரிமலைக்குள் விழுந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
கடந்த வார இறுதியில், இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த சீனர்களான ஒரு கணவனும் மனைவியும், Banyuwangi என்னுமிடத்திலுள்ள, Ijen என்னும் எரிமலையின் அருகே நின்று சூரியோதயத்தைக் காண திட்டமிட்டிருக்கிறார்கள்.
அப்போது, அந்த எரிமலையின் வாயருகே நின்றபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார் Huang Lihong (31) என்னும் அந்தப் பெண்.
கணவர் புகைப்படம் எடுக்க, விதவிதமாய் போஸ் கொடுத்துக்கொண்டிருந்த Huang, திடீரென கால் தடுக்கி எரிமலைக்குள், 120 அடி பள்ளத்திற்குள் விழுந்திருக்கிறார்.
அவ்வளவுதான், பிறகு அவரது உடலை வெளியே எடுக்கவே மீட்புக்குழுவினருக்கு இரண்டு மணி நேரம் ஆகியுள்ளது.
இதற்கிடையில், வெளியான புகைப்படங்களில் ஒன்றில், Huang எரிமலை வாயினருகே ஒற்றைக்காலைத் தூக்கிக்கொண்டு போஸ் கொடுப்பதைக் காணமுடிகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1