Paristamil Navigation Paristamil advert login

ரஜினிகாந்த் நடிக்கும் 171ஆவது படத்தின் தலைப்பு வெளியானது!

ரஜினிகாந்த் நடிக்கும் 171ஆவது படத்தின் தலைப்பு வெளியானது!

22 சித்திரை 2024 திங்கள் 12:43 | பார்வைகள் : 467


ஜெயிலர்' படம் கொடுத்த பிளாக்பஸ்டர் வெற்றியால் ரஜினிகாந்த், அடுத்தடுத்து படங்களில் உற்சாகமாக நடித்து வருகிறார். ஜெயிலரை தொடர்ந்து ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த படத்தை முடித்த கையோடு, அடுத்து லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்துள்ளார் ரஜினிகாந்த். விக்ரம், லியோ படங்களின் மூலம் இந்தியாவில் மோஸ்ட் வான்டடு இயக்குநராக வளர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான உடன், அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

முக்கியமாக, ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால், இப்படம் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக, படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பையும் பெற்றிருந்தது. இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் -171 என்று தலைப்பு வைக்கப்பட்டு படத்தின் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. விக்ரம், லியோ படத்தின் பெயர் அறிவிப்புக்கு புரோமோ வீடியோ தயாரித்த லோகேஷ், தலைவர் – 171 படத்திற்கு என்ன செய்யப்போகிறார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று 2 நாட்களுக்கு முன்பாக படக்குழு அறிவித்திருந்தது. அடுத்து லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், படத்தின் தலைப்பு குறித்து அறிவிப்பு மாலை 6 மணிக்கு வெளியானது. படத்திற்கு கூலி என்ரு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் டீசர் வீடியோவில், தங்கத்தை திருடி வைக்கப்பட்ட குடோனில் அதிரடியாக நுழையும் ரஜினி, அடியாட்களை ஆக்ரோஷமாக அடித்து பறக்கவிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர் பேசும் பஞ்ச் வசனமும் அனல் பறக்கிறது. ஒட்டுமொத்தத்தில் லோகேஷ் கனகராஜின் ஸ்டெஸ் மேக்கிங்கியும், ரஜினியின் ஸ்டைலிஸான நடிப்பும் ரசிகர்களுக்கு பெரிய விருந்தே காத்திருக்கிறது என்று இந்த டீசர் வீடியோவில் தெரிகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்