இலங்கையை உலுக்கிய கோர விபத்து - இரண்டு பந்தயக் கார்களின் சாரதிகள் கைது
22 சித்திரை 2024 திங்கள் 09:47 | பார்வைகள் : 5787
தியத்தலாவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய பந்தய கார்களின் சாரதிகள் இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட இரு பந்தயக் கார்களின் சாரதிகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ் ஆண்டுக்கான “பொக்ஸ் ஹில்”கார் பந்தியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (22) பதுளை தியத்தலாவையிலுள்ள கார் பந்தியத் திடலில் இடம்பெற்றன.
இதன்போது, எதிர்பாராத விதமாக பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கரொன்று பந்தயத்திடலை விட்டு விலகி அங்கிருந்தவர்கள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர். 8 வயது சிறுமி, 4 போட்டி உதவியாளர்கள், இரு பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan