கனடாவில் கப்பல் விபத்து - 2 பேர் பலி

22 சித்திரை 2024 திங்கள் 08:31 | பார்வைகள் : 6136
கனடாவில் கப்பல் விபத்தில் சிக்கி இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் பகுதி கடலில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மீன்பிடிக் கப்பல் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. கப்பலில் பயணம் செய்த மேலும் நான்கு பேர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
நீரில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்டு, விமானம் மூலம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரண்டு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025