சென் நதியில் இருந்து சடலம் மீட்பு!
21 சித்திரை 2024 ஞாயிறு 15:01 | பார்வைகள் : 10632
சென் நதிக்குள் இருந்து சடலங்கள் மீட்பது தொடர்கதையாகியுள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள Alexandre-III மேம்பாலத்துக்கு அருகே சென் நதியில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. சடலம் அடையாளம் காணப்படவில்லை. முதற்கட்ட தகவல்களின் படி, பல நாட்களாக தண்ணீருக்குள் சடலம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் முற்றிலுமாக சிதைவடைந்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் காணாமல் போனதாக அறிவிக்கப்படவர்களின் விபரங்களோடு மேற்படி சடல அடையாளங்களை காவல்துறையினர் பொருத்தி பார்க்கின்றனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan