விஜய் தேர்தல் விதிகளை மீறினாரா?
21 சித்திரை 2024 ஞாயிறு 09:03 | பார்வைகள் : 9467
தளபதி விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகி உள்ளது.தளபதி விஜய் தனது ஜனநாயக கடமையை ஆற்ற நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார் என்பதும் அவர் வாக்கு செலுத்துவதை புகைப்படம் எடுக்க போட்டோகிராபர்கள் போட்டி போட்டனர் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் விஜய் வாக்களிக்க வரும்போது அவர் தன்னுடன் 200க்கும் அதிகமானவர்களை அழைத்து வந்ததால் விஜய்யால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தேர்தல் நாளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சமூக ஆர்வலரின் இந்த புகார் மீது காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதை புரிந்து தான் பார்க்க வேண்டும்.


























Bons Plans
Annuaire
Scan