பரிஸ் : காவல்துறையினர் மீது மோதல்! - சிறுமி உள்ளிட்ட நால்வர் காயம்!!
21 சித்திரை 2024 ஞாயிறு 07:18 | பார்வைகள் : 15149
காவல்துறையினரின் மகிழுந்துடன் மற்றொரு மகிழுந்து மோதியதில் சிறுமி உள்ளிட்ட் நால்வர் காயமடைந்துள்ளனர்.
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இன்று ஏப்ரல் 21, ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. Parc des Princes அருகே உள்ள Auteuil சுரங்கத்துக்குள் சிவப்பு சமிக்ஞையை மதிக்காது பயணித்த வாகனம் ஒன்றை காவல்துறையினர் துரத்திச் சென்ற நிலையில், அவர்களது மகிழுந்தை மற்றொரு மகிழுந்து மோதித்தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இச்சம்பவத்தில் சிறுமி ஒருவரும், காவல்துறை வீரர் ஒருவரும் உள்ளடங்கலாக நால்வர் காயமடைந்துள்ளனர்.
காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய மகிழுந்து சாரதியும், அவர்களை மோதித்தள்ளிய இரண்டாவது மகிழுந்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்த சிறுமி 10 வயதுடையவர் எனவும், அவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan