40 மாத்திரைகளை விழுங்கிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண்கள்

20 சித்திரை 2024 சனி 13:36 | பார்வைகள் : 4918
20 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய கொக்கெய்ன் போதைப் பொருளுடன் இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கிய 40 மாத்திரைகளை விழுங்கிய நிலையில் கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதான இருவரும் கினியா நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025