மற்றுமொரு இஸ்லாமிய மத போதகர் பிரான்சில் இருந்து வெளியேற்றம்!
20 சித்திரை 2024 சனி 10:19 | பார்வைகள் : 8447
இஸ்லாமிய மதகுருவான (இமாம்) ஒருவர் பிரெஞ்சுக் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
Toulouse நகரில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றில் போதனைகள் வழங்கிவந்த Mohammed Tataïat எனும் இமாமே வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் எனவும், யூத மதம் மீது தீரா வெறுப்பு கொண்டவர் எனவும், அவரது மாணவர்களுக்கு மத போதனைகளின் போது யூத மத வெறுப்பையும் பயிற்றுவிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
பிரான்சில் இருந்து அவர் அல்ஜீரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இத்தகவலை உள்துறை அமைச்சர் Gérald Darmanin நேற்று ஏப்ரல் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழை அறிவித்தார்.
முன்னதாக கடந்த வருட இறுதியில் இஸ்லாமிய மத போதகர் ஒருவர் இதே காரணத்துக்காக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan