Seine-et-Marne : இளைஞனை சுற்றி வளைத்து கத்திக்குத்து தாக்குதல்!
18 சித்திரை 2024 வியாழன் 18:17 | பார்வைகள் : 12559
நேற்று புதன்கிழமை இரவு Emerainville (Seine-et-Marne) நகரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
நள்ளிரவுக்கு சற்று முன்பதாக 25 வயதுடைய குறித்த இளைஞன் வீதியில் நடந்து சென்றபோது அவரை சுற்றி வளைத்த மூவர் கொண்ட குழு, மிக மோசமாக அவரைத் தாக்கியுள்ளது. பின்னர் அவர்களில் ஒருவர் கத்தி ஒன்றை உருவி எடுத்து குறித்த இளைஞனை கத்தியால் தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த குறித்த நபர் Jossigny நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் சென்றடையும் முன்னர், தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பில் Torcy நகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan