Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோவில்  வாகன தரிப்பு குற்றச் செயலுக்கான அபராதம் அதிகரிப்பு

ரொறன்ரோவில்  வாகன தரிப்பு குற்றச் செயலுக்கான அபராதம் அதிகரிப்பு

18 சித்திரை 2024 வியாழன் 08:40 | பார்வைகள் : 7370


கனடாவின் ரொறன்ரோவில் வாகன தரிப்பு குற்றச் செயல்களுக்கான அபராதம் உயர்த்தப்பட உள்ளது.

கட்டணங்களை உயர்த்துவது குறித்த யோசனைக்கு நகர நிர்வாகம் ஆதரவாக வாக்களித்துள்ளது.

வாகன தரிப்பு தொடர்பிலான 125 குற்றச் செயல்களுக்கான அபராதங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது அறவீடு செய்யப்படும் அபராதத் தொகை மிகவும் குறைவானது என நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சில வகை குற்றச் செயல்களுக்கான அபராதத் தொகை 50 டொலர்களினாலும், 30 டொலர்களினாலும் உயர்த்தப்பட உள்ளது.

அபராதத் தொகைகள் பணவீக்கம் போன்ற காரணிகளைத் தாண்டி அதே நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக விரைவில் அபராதத் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்