UEFA அரையிறுதிக்கு முன்னேறிய Bayern Munich
18 சித்திரை 2024 வியாழன் 08:23 | பார்வைகள் : 5343
சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதியில் ஆர்செனல் அணியை வீழ்த்திய பாயர்ன் முனிச் அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜேர்மனியின் Allianz Arena மைதானத்தில் நடந்த UEFA காலிறுதிப் போட்டியில் பாயர்ன் முனிச் (Bayern Munich) மற்றும் ஆர்செனல் (Arsenal) அணிகள் மோதின.
இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் முதல் பாதியில் கோல் விழவில்லை. இரண்டாம் பாதியின் 63வது நிமிடத்தில் பாயர்ன் அணிக்கு கோல் கிடைத்தது.
ரஃபேல் குர்ரேரோ அடித்த ஷாட்டை, மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த கிம்மிக் (Kimmich), தனது தலையால் முட்டி கோலாக மாற்றினார். அதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க போராடினாலும் பலன் கிடைக்கவில்லை.
இருதரப்பிலும் அடிக்கப்பட்ட கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
இறுதியில் பாயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மேலும் அந்த அணி Aggregate 3-2 என முன்னிலை பெற்றதால் அரையிறுதிக்கு முன்னேறியது.
ஏப்ரல் 30 ஆம் திகதி அன்று நடைபெற உள்ள Leg1 அரையிறுதிப் போட்டியில், பாயர்ன் முனிச் அணி ரியல் மாட்ரிட் (Real Madrid) அணியை சந்திக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan