Paristamil Navigation Paristamil advert login

சிறுவர்கள் மீதான வன்முறைக்கு எதிராக இறுக்கமான சட்டம்! - ஜனாதிபதி அறிவிப்பு!!

சிறுவர்கள் மீதான வன்முறைக்கு எதிராக இறுக்கமான சட்டம்! - ஜனாதிபதி அறிவிப்பு!!

17 சித்திரை 2024 புதன் 17:36 | பார்வைகள் : 3162


சிறுவர்கள் மீது இடம்பெறும் வன்முறைகளை தடுக்க இறுக்கமான சட்டங்களை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சில கருத்துக்களை வெளியிட்டார்.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறைகளை முறைப்பாடு செய்யவும், மிக விரைவாக காவல்துறையினரை அழைக்கவும் பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அதேபோன்று சிறுவர்கள் மீதான வன்முறைகளை தடுக்கவும் பல இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி  மக்ரோன் தெரிவித்தார்.

'பெண் கொலைகள் வாட்டி வதைத்தபோது நாம் ஒரு Grenelle வரைவை உருவாக்கினோம். அது பலனளித்தது. அதேபோன்ற ஒரு வரைவை சிறுவர்களை பாதுகாக்கவும் உருவாக்குவோம்!' என மக்ரோன் உறுதியளித்தார். 

இன்று ஏப்ரல் 17 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சர்கள் கூட்டத்தின் (Conseil des ministres) முடிவில் மக்ரோன் இதனை அறிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்