Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை!

இலங்கையில் இன்று முதல் புதிய விசா நடைமுறை!

17 சித்திரை 2024 புதன் 16:15 | பார்வைகள் : 2930


புதிய விசா நடைமுறை மற்றும் புதிய Online நடைமுறை ஆகியன இன்று 17ஆம் திகதி புதன் கிழமை முதல் அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளாது.

புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணம், பூர்த்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் நாட்டில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதி ஆகிய விடயங்கள் தொடர்பில் அண்மையில் அதிவிஷேட வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டது.

புதிய நடைமுறையினூடாக பல்வேறு நாடுகளில் இருந்து Online ஊடாக விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, சுற்றுலா விசாவை 6 மாத காலப்பகுதிக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒருவருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 200 அமெரிக்க டொலர்களாகவும், இரண்டு வருட நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 300 அமெரிக்க டொலர்களாகவும் அறவிடப்படவுள்ளது.

பத்து வருடங்களுக்கான நுழைவு சுற்றுலா விசாவுக்கான கட்டணம் 1000 அமெரிக்க டொலர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்