பிரபல தயாரிப்பாளர் தனுஷ் மீது வழக்கு தொடர்கிறாரா ?
17 சித்திரை 2024 புதன் 14:53 | பார்வைகள் : 6434
தனுஷ் தற்போது நடித்து இயக்கி முடித்துள்ள ’ராயன்’ விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படமும் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ’குபேரா’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது என்றும் மும்பை தாராவில் நடக்கும் கதை என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’குபேரா’ என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் இதே டைட்டிலை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் நரேந்திரா என்பவர் தெலுங்கானா திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் இது குறித்து அவர் திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த புகாருக்கு சரியான பதில் தனுஷ் மற்றும் ’குபேரா’ பட குழுவினர்களிடம் இருந்து கிடைக்காவிட்டால் அவர் வழக்கு தொடர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan