ரூபாயின் பெறுமதியில் இன்று திடீர் மாற்றம்!
17 சித்திரை 2024 புதன் 12:34 | பார்வைகள் : 13191
கடந்த காலாண்டு முழுவதும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது சிறிய அளவு சரிவை சந்தித்துள்ளது.
நேற்றைய மற்றும் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஏப்ரல் 15ஆம் திகதி நிலவரப்படி, டொலரின் பெறுமதி 298.49 ரூபாயாக காணப்பட்டதுடன், நேற்று (16) இதன் பெறுமதி ரூ. 298.90 ஆகவும் இன்று (17) ரூ. 299.82 ஆக உயர்ந்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகித அட்டவணை காட்டுகிறது.


























Bons Plans
Annuaire
Scan