Paristamil Navigation Paristamil advert login

Hauts-de-Seine : குழு மோதலில் இருவர் காயம்!

Hauts-de-Seine : குழு மோதலில் இருவர் காயம்!

17 சித்திரை 2024 புதன் 09:34 | பார்வைகள் : 10992


ஏப்ரல் 15,  நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குழு மோதலில் இருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.

Levallois-Perret (Hauts-de-Seine) நகரில் இந்த குழு மோதல் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள So Quest எனும் பல்பொருள் அங்காடியின் முன்பாக குவிந்த கறுப்பு நிற ஆடையும் முகக்கவசமும் அணிந்த 30 வரையான நபர்கள் மிக மோசமாக தாக்கிக்கொண்டனர். இரு வேறு நகரங்களைச் சேர்ந்த அவர்கள் இரு குழுக்களாக மோதலில் ஈடுபட்டதாகவும், அதன் முடிவில் இருவர் கத்திக்குத்குக்கு இலக்காகி படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hauts-de-Seine மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இத்தாக்குதல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்