வவுனியாவில் அதிர்ச்சி - குழந்தையின் கழுத்து கத்தி வைத்து வழிப்பறி
17 சித்திரை 2024 புதன் 07:16 | பார்வைகள் : 5509
வவுனியா நகரில் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயை, மூவர் அடங்கிய கும்பல் வழிமறித்துள்ளது.
அவரின் குழந்தையின் மீது கத்தியை வைத்து மிரட்டி நகைகளை பறித்ததுடன், மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan