Paristamil Navigation Paristamil advert login

16 சித்திரை 2024 செவ்வாய் 09:29 | பார்வைகள் : 3112


இளைஞன் ஒருவர், தனது காதலியையும் , காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய பின்னர் தனது உயிரை மாய்த்துள்ளார் .

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு , பணிப்புலம் பகுதியில்    செவ்வாய்க்கிழமை (16)  அதிகாலை இடம்பெற்ற சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 

இளைஞனும் அப்பகுதியை சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக காதலர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காதலியின் வீட்டுக்கு சென்று மறைந்திருந்த இளைஞன் , வீட்டார் காலை வீட்டின் கதவை திறந்த வேளை , வீட்டினுள் நுழைந்து , காதலியையும் , அவரது தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

சத்தம் கேட்டு கூடிய அயலவர்கள் வெட்டு காயங்களுடன் காணப்பட்ட தாயையும் மகளையும் மீட்டு , வைத்தியசாலைக்கு அனுமதி வைத்துள்ளனர். 

அந்நிலையில் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருந்த காணி ஒன்றில் காதலியை வெட்டியதாக சந்தேகிக்கப்படும் இளைஞன் தனது உயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்