இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கனடாவின் அறிவுரை

16 சித்திரை 2024 செவ்வாய் 07:38 | பார்வைகள் : 6103
இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கனடிய அரசாங்கம் அறிவுரை வழங்கியுள்ளது.
ஈரான் மேற்கொண்ட கடுயைமான ட்ரோன் தாக்குதல்கள் தொடர்பில் கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை முறியடித்ததனை இஸ்ரேல் வெற்றியாக கருத வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பதிலுக்கு ஈரான் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவது பொருத்தமற்றது என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையை மதிப்பதாக வார இறுதியில் அந்த பணியை இஸ்ரேல் சரியான முறையில் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேல் காட்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலயத்தின் போர் பதற்றம் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென கனடா கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான அனைத்து முனைப்புக்களுக்கும் கனடா ஆதரவு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைகளுக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வுத் திட்டங்கள் எட்டப்பட வேண்டியது அவசியமானது என மெலெனி ஜோலி தெரிவித்துள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025