உலக கோப்பை போட்டியில் பென் ஸ்டோக்ஸ்...
15 ஆவணி 2023 செவ்வாய் 09:32 | பார்வைகள் : 7746
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை ஒருநாள் போட்டியில் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், வரவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் விளையாட வருமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பென் ஸ்டோக்ஸ்-யிடம் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ஓய்வு அறிவித்திருந்த பென் ஸ்டோக்ஸ் அதை திரும்ப பெற்று உலகக்கோப்பை தொடரில் விளையாட இருப்பதாக தகவல்களும் வந்துள்ளன.
இதற்கு முன்பு, ஆஷஸ் தொடருக்கான டெஸ்ட் ஓய்விலிருந்து மொயீன் அலியை வருமாறு பென் ஸ்டோக்ஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
அதே போல பெண் ஸ்டோக்ஸ் வருவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan