படங்கள் தோல்வியால் நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!
15 சித்திரை 2024 திங்கள் 14:56 | பார்வைகள் : 6185
படங்கள் அடுத்தடுத்தத் தோல்வியால் நடிகை நயன்தாரா இப்போது மலையாள சினிமாவில் கமிட் ஆகியுள்ளார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
'கோல்ட்’, ‘கனெக்ட்’, ‘அன்னபூரணி’ எனத் தொடர்ச்சியாகத் தான் தயாரித்தப் படங்கள் மற்றும் நடித்தப் படங்கள் என அனைத்துமே நயன்தாராவுக்கு தோல்விப் படங்களாக அமைந்தன. பாலிவுட்டில் இவர் நடித்த ‘ஜவான்’ படம் மட்டுமே வசூல் ரீதியாகப் பேசுபொருளானது.
அதே சமயத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், அஜித் படத்தில் இருந்து விலக நேரிட்டது. சில மாதங்கள் படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தவர் நயன்தாரவை வைத்து புதுப்புது பிசினஸ் தொடங்கினார். நயன்தாராவும் படங்கள் தோல்வி குறித்து கவலைப்படாமல் பிசினஸ், குழந்தைகள் என நேரம் செலவிட்டு வந்தார்.
என்னதான் பிசினஸ், தயாரிப்பு என கைவசம் தொழில்கள் இருந்தாலும் நடிப்புதான் நயனுக்கு ஃப்ர்ஸ்ட். ஆனால், இப்போது ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’ என்ற இரண்டு படங்கள் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. பெரிய ஹீரோக்கள் படங்களில் இவருக்கு வாய்ப்புகள் சுத்தமாக இல்லை. ஹீரோயின் சென்ட்ரிக் படங்களும் பெரிதாக போகாமல் மார்க்கெட் இழந்தார்.
இதனால், தான் அறிமுகமான மலையாள சினிமா பக்கம் ஒதுங்கியிருக்கிறார் நயன்தாரா. நடிகர் நிவின் பாலி நடிக்கும் ‘டியர் ஸ்டூண்ட்ஸ்’ என்ற படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர்கள் இருவரும் இதற்கு முன்பு ‘லவ் ஆக்ஷன் ட்ராமா’ என்றப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுகமான மலையாள சினிமாவில் அவ்வப்போது படங்கள் நடித்து வந்தாலும் இப்போது தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் அந்தப் பக்கம் சென்றிருக்கிறார் நயன் என கிசுகிசுக்கிறது கோலிவுட்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan