சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் KPY பாலா...

15 சித்திரை 2024 திங்கள் 08:29 | பார்வைகள் : 5698
சமீபத்தில் ராகவா லாரன்ஸ், பாலாவை ஹீரோ ஆக்குகிறேன், அந்த தம்பிக்கு ஏற்ற கதையை கொண்டு வாருங்கள் என இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இது குறித்து பாலா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’என் வாழ்நாள் கனவை எனது ரோல் மாடல் ராகவா லாரன்ஸ் அவர்கள் நிறைவேற்றி உள்ளார். இவனை ஹீரோவாக லான்ச் பண்றேன், டைரக்டர்ஸ் கதை எடுத்து வாருங்கள் என்று அவர் மேடையில் அறிவித்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. இது என் கனவு நினைவாகும் தருணத்தை விட மேலானது. இதை வார்த்தைகளால் விளக்க முடியாது. என் வாழ்நாள் முழுவதும் இதற்கு உண்மையான இருப்பேன்.
என் தகுதிக்கும் திறமைக்கும் மேல் ஒன்றுதான் இது. மீண்டும் ஒருமுறை என் மீது நம்பிக்கை வைத்து என் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய மாஸ்டர் அவர்களுக்கு எனது நன்றி’ என்று கூறியுள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3