தேர்தல் விதிமீறல் என்று போலீஸ் குற்றச்சாட்டு : சாலை மறியலில் இறங்கிய அண்ணாமலை

15 சித்திரை 2024 திங்கள் 01:38 | பார்வைகள் : 7638
தேர்தல் நடத்தை விதிமுறைகளை சரியாக பின்பற்றி வரும் பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை போலீசை கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டார்.
சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த கோவை தொகுதி பா.ஜ.,வேட்பாளர் அண்ணாமலை ஒண்டிப்புதூர் கதிர் மில்ஸ் மேல்நிலை பள்ளி அருகே வந்தபோது ஒலிபெருக்கிகளை ஆப் செய்து விட்டு வாக்காளர்களை பார்த்து கைகளை அசைத்த வாரு இரு கரங்களைக் கூப்பி வணங்கி வந்தார்.
இதைப்பார்த்த போலீசார் தேர்தல் விதிமுறை மீறல் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதை அடுத்து பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அண்ணாமலை கோவை திருச்சி பிரதான சாலை கதிர் மில் பள்ளி அருகே சாலையில் அமர்ந்து மறியலில் இறங்கினர்.
போலீசார் சமரசம் செய்யும் முயற்சியில் இறங்கினர். இதை அடுத்து மறியலை கைவிட்டு திரும்பினார் இதனால் அப்பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2