▶ கழுத்துப்பட்டி இல்லாமல் நாய்களை அழைத்துச் சென்றால் 750 யூரோக்கள் குற்றப்பணம்!
14 சித்திரை 2024 ஞாயிறு 19:34 | பார்வைகள் : 4065
உங்கள் வளர்ப்பு நாய்களை வனப்பகுதிகளுக்குள் அழைத்துச் செல்லும் போது அதற்கு கழுத்துப்பட்டி அணிந்து, அதனை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் பட்டியினை கைகளிலேயே வைத்திருப்பது இன்று முதல் கட்டாயமானதாகும்.
வனப்பகுதிகளில் பாலூட்டிகள் பிறப்புக்காக பறவைகள் கூடு கட்டும் காலம் என்பதால், நாளை ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி முதல் வனப்பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்பவர்கள், நாய்களை அழைத்துச் சென்றால் அது தொடர்பாக விழிப்புடன் இருத்தல் அவசியமானதாகும்.
பிரெஞ்சு தேசிய வனவிலங்கு பாதுகாப்புச் சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. வனப்பகுதிக்குள் இந்த கழுத்துப்பட்டி இல்லாமல் நாயினை அழைத்துச் செல்பவர்களுக்கு 750 யூரோக்கள் வரை குற்றப்பணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.