அவதானம்! - 100 கி.மீ வேகத்தில் புயல்!
14 சித்திரை 2024 ஞாயிறு 19:15 | பார்வைகள் : 9627
நாளை ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை, கடும் புயல் காரணமாக நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு மாவட்டங்களான Nord, Pas-de-Calais மற்றும் Somme ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 100 கி.மீ வேகத்தில் கடும் புயல் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் எனவும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணி அளவில் பெயரிடப்படாத புயல் வடக்கு கடற்பகுதியை வட்டமிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்கும்படி உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan