இலங்கையில் அம்புலன்ஸ் சேவைகள் 24 மணி நேரமும் தயார் நிலையில்

14 சித்திரை 2024 ஞாயிறு 17:21 | பார்வைகள் : 5127
பண்டிகைக் காலத்தில் வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான சுகாதார சேவைகளை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார்.
பொதுவாக பண்டிகைக் காலங்களில் விபத்துகள், உணவு விஷம் மற்றும் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருகிறது.
விபத்துக்கள், உணவு விஷமான சம்பவங்கள் மற்றும் தொற்றாத நோய்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு துரித சேவைகளை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் மஹீபால தெரிவித்தார்.
அவசர காலங்களில் சேவைகளை வழங்க அம்புலன்ஸ் சேவைகள் இருபத்திநான்கு மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025