கண்ணிவெடி வெடித்து 3 குழந்தைகள் உயிரிழப்பு!
14 சித்திரை 2024 ஞாயிறு 14:01 | பார்வைகள் : 3079
பாகிஸ்தானில் நடந்து சென்றுகொண்டிருந்த போது தரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மீது தவறுதலாக கால் வைத்து வெடித்ததில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் - கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வாசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை பார்பதற்காக வான்னா டவுன் பகுதியைச் சேர்ந்த 4 குழந்தைகள் சென்றுள்ளனர்.
குழந்தைகள் நடந்து சென்று கொண்டிருந்தபோது தரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மீது தவறுதலாக கால் வைத்ததில் கண்ணிவெடி வெடித்துச் சிதறியது.
இதன்போது, 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்றொரு குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அந்த இடத்தில் கண்ணிவெடியை பதுக்கி வைத்தது யார் என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்கு வாசிரிஸ்தான் பகுதியில் நீண்ட காலமாக கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.