விஷாலின் முக்கிய அரசியல் அறிவிப்பு..
14 சித்திரை 2024 ஞாயிறு 09:56 | பார்வைகள் : 6110
தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அறிவித்த நிலையில் விஷாலும் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து இந்த அரசியல் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாது என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் என்றும் அறிவித்தார்.
மேலும் தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலி ஒன்றை அவர் வெளியிட்ட நிலையில் கோடிக்கணக்கான மக்கள் அதில் உறுப்பினராக சேர்ந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் 2026 தேர்தல் களத்தில் விஜய் பங்கு பெற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நடிகர் விஷாலும் தனது அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக விஷால் அறிவித்துள்ள நிலையில் அவர் தனியாக போட்டியிடப் போகிறாரா அல்லது ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து தமிழக முழுவதும் போட்டியிட போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
ஒருவேளை அவர் அரசியல் கட்சியை ஆரம்பித்தால் 2026 தேர்தல் களம் என்பது விஜய் vs விஷால் என்று இருக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.


























Bons Plans
Annuaire
Scan