Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் ஒருவர் கைது

இலங்கையில் போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் ஒருவர் கைது

13 சித்திரை 2024 சனி 12:45 | பார்வைகள் : 4186


500, 1000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு தயாரான தாள்கள் மற்றும் போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் அஹங்கமவில் வைத்து காலி பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் வெள்ளிக்கிழமை  இரவு  கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 47 வயதான அஹங்கம இமதுவ வீதி, ஷ்ரமதான மாவத்தையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி நாணயத்தாள்களுக்கு மேலதிகமாக சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பதற்காக பெறப்பட்ட 10 கடவுச்சீட்டுகளும் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக அஹங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்  காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்