போலி கடவுச் சீட்டுடன் இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்த இலங்கை தம்பதி கைது

13 சித்திரை 2024 சனி 07:08 | பார்வைகள் : 6166
போலி கடவுச் சீட்டுடன் இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்த தம்பதியினர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு நேற்றிரவு வருகைத் தந்த விமானத்தில் ஏறவிருந்த பயணிகளின் பயண ஆவணங்களை இந்திய குடிவரவு பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
பெரம்பலூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 45 வயதான ஆண் ஒருவரும் 40 வயதுடைய அவரது மனைவியுமே இதன்போது கைதாகியுள்ளனர்.
குறித்த இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூரில் தங்கியிருந்து, தங்களுக்கான இந்திய அடையாள அட்டைகளை பெற்றுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் அவர்கள் இலங்கை செல்ல முடிவு செய்து பெரம்பலூர் முகவரியில் குறித்த போலி கடவுச் சீட்டுக்களை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இருவர் தொடர்பிலும் இந்திய பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1