அறிமுக IPL போட்டியிலேயே சிக்ஸர் மழை பொழிந்த வீரர்!
13 சித்திரை 2024 சனி 06:59 | பார்வைகள் : 9226
லக்னோவில் நடந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க் அதிரடியாக 55 ஓட்டங்கள் விளாசினார்.
ஐபிஎல் 26வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க் (Jake Fraser-McGurk) 35 பந்தில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் விளாசினார்.
22 வயது அவுஸ்திரேலிய வீரரான ஜேக் பிரேசருக்கு இது முதல் ஐபிஎல் போட்டி ஆகும். BBL டி20 தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேக் பிரேசர் தற்போது டெல்லி அணியில் இணைந்துள்ளார்.
மூன்றாவது இடத்தில் இறங்கி 55 ஓட்டங்கள் விளாசியதன் மூலம், அறிமுக போட்டியிலே அதிக ஓட்டங்கள் எடுத்த 2வது வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார்.
இதற்கு முன் மைக்கேல் ஹஸ்ஸி CSK அணிக்காக 116 ஓட்டங்கள் எடுத்திருந்தார். ஜேக் பிரேசர் 38 டி20 போட்டிகளில் 700 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 40 சிக்ஸர், 46 பவுண்டரிகள் அடங்கும்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan