Villejuif : முதலைக்குட்டியுடன் பயணித்த இருவர் கைது!!
12 சித்திரை 2024 வெள்ளி 22:15 | பார்வைகள் : 12377
சிறிய முதலைக் குட்டி ஒன்றை வைத்திருந்த இருவரை Val-de-Marne மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி அளவில் இரு இளைஞர்களும் Villejuif (Val-de-Marne) நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் 40 செ.மீ நீளமுடைய சிறிய முதலைக் குட்டி ஒன்று இருந்துள்ளது.
சாதாரண சோதனை நடவடிக்கைகளுக்காக குறித்த இருவரையும் சோதனையிட்டபோது, அவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான பெட்டி ஒன்று இருந்துள்ளது. அதனை திறக்கும்படி காவல்துறையினர் பணித்துள்ளனர். ஆனால் அவர்களில் ஒருவர் குறித்த பெட்டியை தூக்கிக்கொண்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அதன் பின்னரே இருவரும் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டதில் அதற்குள் முதலைக் குட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
இருவருக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan