சிம்புக்கு சொன்ன கதையில் பிரதீப்பா.?
12 சித்திரை 2024 வெள்ளி 14:18 | பார்வைகள் : 9380
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனரானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு லவ் டுடே படத்தை இயக்கி நடித்தவர், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 26வது படத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போகிறார். அஸ்வத் மாரிமுத்து என்பவர் இயக்கும் இந்த படத்தின் ப்ரமோ வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த கதையில் ஏற்கனவே சிம்பு நடிக்க இருந்ததாகவும், அந்த கதையில்தான் தற்போது பிரதீப் நடிக்க நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதை மறுத்துள்ளார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு இடத்தில் நான் கூறிய கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் வேறு கதை என்று தெரிவித்திருப்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே நானும் பிரதீப் ரங்கநாதனும் ஒன்றாக பணியாற்றினோம். தற்போது நாங்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த படத்தின் டைட்டிலை வருகிற மே ஒன்றாம் தேதி வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கப் போகிறோம். இப்படம் இளைஞர்களை கவரும் வகையில் சென்னையை மையமாக கொண்ட கதையில் உருவாகிறது என்கிறார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan