இலங்கையில் கொரோனா தொற்றுள்ளான நபர் மரணம் - நோயாளிகள் தனிமைப்படுத்தல்

12 சித்திரை 2024 வெள்ளி 11:34 | பார்வைகள் : 5801
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் உயிரிழந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, உயிரிழந்த நபர் சிகிச்சைபெற்றுவந்த விடுதியில் உள்ள நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படும் இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படாமல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், இதன் காரணமாக நாட்டில் மீண்டும் தோற்று பரவும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025